விடுதலை படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூரி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

‘விடுதலை’

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு, இளையராஜா இசையமைக்கிறார்.

வைரல்

‘விடுதலை’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் சூரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஸ்டுடியோ இல்ல.. உண்மையான காடு.. என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here