கோவை சரளா நடிப்பில் உருவாகியுள்ள ‘செம்பி’ திரைப்படம் வெளியாகும் அதே நாளில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள “ஓ மை கோஸ்ட்” திரைப்படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவர்ச்சி நடிகை

ஆர்.யுவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ஓ மை கோஸ்ட்”. கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், நடிகர் சதீஷ், நடிகைகள் தர்ஷா குப்தா, சஞ்சனா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். “ஓ மை கோஸ்ட்” திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நாளில் ரிலீஸ்

இந்நிலையில், “ஓ மை கோஸ்ட்” படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. கோவை சரளா நடித்துள்ள ‘செம்பி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here