லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘கனெக்ட்’

இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கனெக்ட்’. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள இப்படத்தில், சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

டீசர் வைரல்

கடந்த ஆண்டு நடிகை நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு ‘கனெக்ட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. திகிலூட்டும் வகையில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ‘கனெக்ட்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here