தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொன்டிருந்த போது ‘கலகத் தலைவன்’ குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கலகத் தலைவன்

தடம், மீகாமன் போன்ற திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கலகத் தலைவன்’. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், பிக் பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பார்த்தீர்களா?

இந்த நிலையி, இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி சென்றபோது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் பேசிக்கொண்டே சென்றார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரிடம் ”கலகத் தலைவன் பார்த்தீர்களா?” என கேட்டார். அதற்கு, முதல் நாளே படத்தை பார்த்ததாகவும், படம் நன்றாக உள்ளதாகவும் அமைச்சர் பதில் அளித்து பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here