உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “கலகத் தலைவன்” திரைப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கலகத் தலைவன்

தடம், மீகாமன் போன்ற திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கலகத் தலைவன்’. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், பிக் பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வாழ்த்து

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக “கலகத் தலைவன்” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here