டுவிட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியதை தொடர்ந்து பிரபல நிறுவனமான அமேசானும் ஊழியர்கள் பணிநீக்கத்தை தொடங்கியுள்ளது.

ஆட்குறைப்பு

உலகப் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை ரூ.3.5 லட்சம் கோடிக்கு வாங்கினார். அதனை வாங்கிய கையோடு டுவிட்டரில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் 4 ஆயிரம் பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்தார். இந்தியாவில் 90 சதவீத ஊழியர்களை அவர் நீக்கினார். ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் 11 ஆயிரம் ஊழியர்கள் நீக்கப்பட்டனர். டுவிட்டர், ஃபேஸ்புக்கை தொடர்ந்து பல்வேறு சமூகவலைதள நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளன.

அதிரடி நீக்கம்

இந்நிலையில், உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. செலவினங்களை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இமெயில் மூலமாக தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து அமோசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சில பணியிடங்கள் அமேசான் நிறுவனத்தில் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட பொறுப்புகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நிறுவனத்துக்குள்ளேயே வேறு துறைகளுக்கு (காலி இடங்கள் இருப்பின்) விண்ணப்பித்து இடம் மாறி கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here