கால்பந்து வீராங்கனை பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாணவி மரணம்

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி பிரியா. கால்பந்து வீராங்கனையான இவருக்கு சில தினங்களுக்கு முன்பு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலி காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது பிரியாவின் காலில் ஜவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பெரியார் நகரில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்கள் மேற்கொண்ட தவறான சிகிச்சையால் பிரியாவின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரது கால்கள் அகற்றப்பட்ட நிலையில், கடந்த 15-ம் தேதி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சுகாதாரத்துறை தரப்பிலும், காவல்துறையினர் தரப்பிலும் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஆறுதல்

இந்த நிலையில், மறைந்த மாணவி பிரியாவின் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் பிரியாவின் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பார்வையிட்டார். பின்னர் அரசு சொன்னது போல் ரூ.10 லட்சம் நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அரசு சார்பாக வீடு ஒதுக்கியதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

தாங்க முடியாத துயரம்

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்! ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும் – நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here