அதிமுக தற்போது செயல்படாத கட்சியாக உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

செயல்படாத கட்சி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்ணேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் அக்கடசியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அம்மா மக்கள் முன்ணேற்றக் கழகம் சுதந்திரமாக இயங்கக்கூடிய கட்சி என்றார். அதிமுக தற்போது செயல்படாத கட்சியாக உள்ளது என்றும் எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் உச்சத்தில் இருப்பதாகவும் கூறினார்.

கூட்டணி?

எடப்பாடி பழனிசாமி அம்மாவின் தொண்டரே இல்லை என்பதை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்த டிடிவி தினகரன், தான் எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைப்பேன் என்று எப்போதும் கூறியது கிடையாது என்றார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், அம்மாவின் தொண்டர்கள் ஒரு அணியாக ஒன்றுதிரள வேண்டும் என்றும் அவ்வாறு ஒன்றுகூடி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றிபெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here