மகிழ் திருமேணி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ந்திரைப்படம் கலகத்தலைவன். பிக்பாஸ் பிரபலம் ஆரவ் வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில், உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். வருகிற நவம்பர் 18-ம் தேதி கலகத்தலைவன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், அங்கு வந்திருந்த இயக்குநர்கள் அனைவரையும் கலாய்த்து தள்ளினார். இப்படத்தை எடுத்துமுடிக்க இயக்குநர் மகிழ் 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகவும், ஷூட்டிங்கை சீக்கிரமாக முடித்தாலும் பின்னணி பணிகளுக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டார் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here