“ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகை தர்ஷா குப்தா அணிந்திருந்த உடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் நடிகர் சதீஷ். மும்பையில் இருந்து வந்த சன்னி லியோன் நம் கலாச்சாரப்படி பட்டு சேலை கட்டியிருப்பதாகவும், கோயம்புத்தூரைச் சேர்ந்த தர்ஷா குப்தாவின் உடையை பார்க்குமாறும் கூறியிருந்தார். சதீஷின் இந்தப் பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகர் சதீஷ், சிறிது நேரத்தில் அதனை டெலிட் செய்தார். இந்த நிலையில், சதீஷ் சொல்வது பொய் என நடிகை தர்ஷா குப்தா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; சதீஷ் என் மீதே திருப்பி விடுவது சரியா, நான் உங்களை மேடையில் இப்படிச் சொல்லச் சொன்னேனா? இது மிகவும் விசித்திரமானது. யாராவது என்னை பற்றி, மேடையில் நீங்க அசிங்கமா பேசுங்கனு சொல்லுவாங்களா? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ ஹர்ட்டா இருந்துச்சு, ஆனா நான் பெரிதாக காட்டிக்கவில்லை. ஆனால் இப்போ இப்படி சொல்றது, நல்லா இல்லை… இவ்வாறு நடிகை தர்ஷா குப்தா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here