தனிநபருடைய உடம்ப வச்சி விமர்சனம் பண்ணுறது ரொம்ப தப்பு என்று நடிகர் தெரிவித்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் வெற்றி விழாவில் கலந்துகொண்டு நடிகர் சிம்பு பேசியதாவது; இந்த படம் நல்லபடியா ரிலீஸ் ஆச்சு. இந்த படத்துல என்ன பாராட்டி எழுதுறாங்க. எப்போமே சில பேர் என்னுடைய உடம்ப வச்சி தப்பா எழுதுவாங்க. ஒரு படத்தை விமர்சனம் பண்ணலாம் தனிநபருடைய உடம்ப வச்சி விமர்சனம் பண்ணுறது ரொம்ப தப்பு. தனிப்பட்ட வாழ்கையை உடம்ப வச்சி எழுதி யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க, நன்றி. இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here