நடிகை சமந்தா இந்தி நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

முன்னணி நடிகை

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. இளம் ஹீரோக்கள் முதல் முன்னணி ஹீரோக்கள் வரை ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இவர், தனது அழகான சிரிப்பாலும், எதார்த்தமான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். திருமண முறிவுக்கான காரணத்தை வெளியிடவில்லை. தற்போது படங்களில் இருவரும் தீவிரமாக நடித்து வருகிறார்கள்.

திருமணம்?

சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யாவும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக தகவல் பரவியது. சோபிதாவை தனது வீட்டுக்கு நாகசைதன்யா அழைத்து சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு பட உலகினர் பேசொனர். இந்த நிலையில், நடிகை சமந்தாவும் 2-வது திருமணத்துக்கு தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தி நடிகர் ஒருவரை சமந்தா காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது. ஆனால் சமந்தா தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here