ஸ்லிம்மான லுக்கில் பார்ப்பதற்கு ஸ்கூல் படிக்கும் பையனைப் போல் இருக்கும் லெஜண்ட் சரவணனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிப்பில் ஆர்வம்

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் சரவணன், தனது கடைக்கான விளம்பரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தமன்னா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளுடன் ஜோடியாக விளம்பரங்களில் தோன்றிய சரவணன், தற்போது ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுத்திருகிறார். தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக தயாரித்த “தி லெஜன்ட்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படம் கடந்த ஜூலை மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது. ஜே.டி – ஜெரி இயக்கியிருந்த இப்படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா கதாநாயகியாக நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

ரொமாண்டிக் ஹீரோ

லெஜண்ட் சரவணன் தற்போது 2-வது படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அப்படத்தில் ரொமாண்டிக் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்துள்ள சரவணன், அதற்காக கதை கேட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளாராம். மேலும் சரவணன் நடிக்கும் 2-வது படம் குறித்த அறிவிப்பு வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சரவணன் அதில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லிம்மான லுக்கில் பார்ப்பதற்கு ஸ்கூல் பையனைப் போல் இருக்கும் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. 50 வயதை கடந்தும் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள்! என நெட்டிசன்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here