சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலை சினிமா முன்னணி நடிகை ஒருவர் நாள்தோறும் தவறாமல் பார்த்து வருவதாக அந்த சீரியலின் நாயகன் கூறியுள்ளார்.

சீரியல்

சின்னத்திரையில் நிலவி வரும் போட்டியால் சீரியல் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றன. சன் டிவி, கலைஞர் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் டிவி, விஜய் டிவி என தமிழில் முன்னணியில் உள்ள டிவி சானல்கள் ரசிகர்களின் மனம் கவரும் வகையில் பல்வேறு கதையம்சங்களை கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

ரசிகர் பட்டாளம்

அந்த வரிசையில், விஜய் டிவியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட “தென்றல் வந்து என்னைத்தொடும்” சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வினோத் பாபு – பவித்ரா ஜனனி நடித்துள்ள “தென்றல் வந்து என்னைத்தொடும்” சீரியல் சற்றே வித்தியாசமான கதைக்களத்தை கொண்டுள்ளதால், நாள்தோறும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

நாயகன் – நாயகி நெகிழ்ச்சி

சமீபத்தில் விஜய் டிவியின் ஸ்டார் நைட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தொடரின் நாயகன் வினோத் பாபு – நாயகி பவித்ரா ஜனனி இருவரும் இதுதொடர்பாக பேசியுள்ளனர். அப்போது பேசிய வினோத் பாபு, தங்களின் “தென்றல் வந்து என்னைத்தொடும்” சீரியலை பார்த்து மிகவும் பிடித்துள்ளதாகவும், தொடர்ந்து இந்த சீரியலை தான் பார்த்து வருவதாகவும் பாகுபலி நாயகி அனுஷ்கா போன் செய்து வாழ்த்தியதாக கூறியுள்ளார். மேலும் தனது அம்மாவும் இந்த சீரியலின் மிகப்பெரிய ரசிகை என்றும் அனுஷ்கா கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்காக வினோத் பாபு – பவித்ரா ஜனனி இருவரும் நிகழ்ச்சி மேடையிலேயே நடிகை அனுஷ்காவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here