மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தெரிவித்திருக்கிறார்.

அடுத்தடுத்த வெற்றி

அஜித் நடித்த ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.ஜே.சூர்யா. அதைத்தொடர்ந்து விஜய்யின் ‘குஷி’ படத்தை இயக்கி வெற்றி இயக்குநானார். இரண்டு ஹிட் படங்களை கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, ‘நியூ’ படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்து, அதிலும் வெற்றி கண்டார். பின்னர் நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்திய அவர், கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘இறைவி’ திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து ‘மெர்சல்’, ‘ஸ்பைடர்’, ‘மாநாடு’ உள்ளிட்ட பல படங்களில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். ‘மாநாடு’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வரும் எஸ்.ஜே. சூர்யாவின் அசாத்திய நடிப்பு, ரசிகர்களை ஈர்த்தது.

இதுதான் காரணம்!

இந்த நிலையில், ஐம்பது வயதை கடந்துள்ள எஸ்.ஜே.சூர்யா, தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளாவது; நான் சினிமாவில் நிறைய ரிக்ஸ் எடுத்துள்ளேன். நியூ படத்தில், சம்பாதித்த மொத்த பணத்தையும் முதலீடு செய்தேன். அப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. ஒருவேளை அப்படம் தோல்வி அடைந்திருந்தால் என் நிலைமை மோசமாகியிருக்கும். அப்படி மோசமாகியிருந்தால் அது என்னுடன் போயிருக்கும். ஒரு வேளை எனக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் என இருந்தால் அது அவர்களையும் பாதிக்கும். எனவே என்னால் அவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் நான் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றேன். இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here