பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கிட்டு தற்கொலை

பிரபல திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலன் சென்னை அரும்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் தூரிகை (28) எம்.பி.ஏ. படித்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த தூரிகை தூக்கிட்டுக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ந்து போன குடும்பத்தார், அவரை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் தூரிகை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காரணம்?

தூரிகையின் உடலை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. எம்.பி.ஏ படித்துள்ள தூரிகை (Being Women) என்னும் இணைய இதழை நடத்தி வந்தார். மேலும் எழுத்தாளராகவும், பல்வேறு திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here