இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சூப்பர் ஹிட் படம்

கடந்த 2017-ம் அண்டு தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது ‘விக்ரம் வேதா’ திரைப்படம். புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ‘விக்ரம் வேதா’ திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தி ரீமேக்கில் வேதாவாக ஹ்ரித்திக் ரோஷனும், விக்ரமாக சயிஃப் அலிகானும் நடித்துள்ளனர். மேலும் ராதிகா ஆப்தே, ரோஹித் சரஃப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சமீபத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் படத்தின் டீசர் பலரின் கவனத்தை பெற்றது. அதனைதொடர்ந்து தற்போது அப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழைப் போலவே, கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் அதே அதிரடி சண்டைக் காட்சிகளுடன் சிறு சிறு மாற்றங்கள் செய்து வெளியாகியுள்ள இந்த டிரெய்லர், பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக பாலிவுட்டில் வெளியான படங்கள் தொடர்ச்சியாக மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வி படமாக அமைந்து வரும் நிலையில், வருகிற 30-ம் தேதி வெளியாக இருக்கும் ”விக்ரம் வேதா” திரைப்படம் பாலிவுட் சினிமாவை மீட்டெடுக்கும் எனப் பலரும் கூறி வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here