உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ள இயக்குநர் பாரதிராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

தவிர்க்க முடியாத இயக்குநர்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

முதலமைச்சர் சந்திப்பு

இயக்குநர் பாரதிராஜாவுக்கு சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறிது நாட்கள் சிகிச்சை பெற்று வந்ததையடுத்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜாவை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் இன்று நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here