லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி ரிலீசானது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் ‘விக்ரம்’ படம் திரையிடப்பட்டது. அப்போது சூர்யா வரும் காட்சியின் போது திரையின் ஒரு பக்கம் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அலறியடித்துக் கொண்டு வேகமாக வெளியேறினர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே, திரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here