தமிழ் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனும் – லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இன்று காலை திருமணம் செய்துகொண்டனர். உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

எதிர்பார்ப்பு

இயக்குனர் விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில், எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை 9-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்தார்.

திருமணம்

அந்த வகையில், நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரெசார்ட்டில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக தொடங்கியது. சரியாக காலை 10.25 மணிக்கு நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். இவர்களது திருமணம் நிகழ்வில் திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பிரபலங்கள் வாழ்த்து

நடிகர்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய்சேதுபதி, சரத்குமார், கார்த்தி, இயக்குனர்கள் மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன், மோகன் ராஜா, அட்லி, தயாரிப்பாளர் போனி கபூர், இசையமைப்பாளர் அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் மகன் ஏ.ஆர்.அமீன் உள்பட ஏராளமான பிரபலங்கள், புதுமண தம்பதியை வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here