‘விக்ரம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு விலை உயர்ந்த கைகடிகாரத்தை பரிசளித்து மகிழ்ந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

மாபெரும் வெற்றி

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கினார். கமல்ஹாசன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அனைவரையும் வெகுவாக கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நெகிழ்ச்சியுடன் பதிவு

‘விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சி அடைந்த நடிகர் கமல்ஹாசன், அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினார். பின்னர் படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கு டிவிஎஸ் அப்பாச்சி வாகனங்களை பரிசளித்தார். அதனைதொடர்ந்து ‘விக்ரம்’ திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு, விலை உயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை கமல்ஹாசன் பரிசளித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை நடிகர் சூர்யா சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here