இயக்குநர் பாலா, நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகும் சூர்யா 41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.

கைவிடப்பட்டதா?

தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவர் இயக்குநர் பாலா. இவரும், தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகருமான சூர்யா கூட்டணியில் உருவான “நந்தா”, “பிதாமகன்” ஆகிய இரு படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியை குவித்ததுடன், உலகளவில் பெரும் பாராட்டுகளை பெற்றது. 19 ஆண்டுகளுக்கு பிறகு பாலா – சூர்யா கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியதுடன், படம் மீது பெரும் ஆவலையும் தூண்டியது. சமீபத்தில்  இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பரபரப்பாக நடந்து வந்த நிலையில், திடீரென நிறுத்தப்படுவதாக படம் குறித்து சில தவறான தகவல்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி

இந்த வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக நடிகர் சூர்யா இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். கன்னியாகுமரியில் துவங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சிறு இடைவேளைக்கு பிறகு விரைவில் துவங்குமென படக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை கண்டிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சூர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவை மேற்கொள்ளார். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here