சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டியுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமோக வரவேற்பு

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டான்’. லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். கடந்த 13ம் தேதி வெளியான ‘டான்’ திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

வசூல் சாதனை

‘டான்’ திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்களில் ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்த நிலையில், 12 நாட்களில் வசூல் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் வசூல் சாதனை படைத்ததை தொடர்ந்து, தற்போது ‘டான்’ திரைப்படமும் ரூ.100 கோடியை வசூலித்து பிளாக் பாஸ்டர் படமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here