தமிழில் மிருகம், அய்யனார், அரவாண் போன்ற பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஆதி தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரும் நடிகை நிக்கி கல்ராணியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆதியும் நிக்கி கல்ராணியும் இணைந்து மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய படங்களில் நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஆதி – நிக்கி கல்ராணி திருமணம் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், இருவரின் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஆதி – நிக்கி கல்ராணி ஜோடியின் திருமணம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெற்ற ஹல்தி மற்றும் மெஹந்தி போடும் விழாவில் நானி, ஆர்யா – சாயிஷா உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here