மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகை

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பல்லவி டே. இளம் நடிகையான இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார். கொல்கத்தாவின் கர்பா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் பல்லவி டே, நேற்று காலை வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பல்லவி டேவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பெரும் சோகம்

பல்லவி டே மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், பல்லவி டேயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியதை அடுத்து, அவருடன் வீட்டில் தங்கியிருந்த ஆண் நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் ஆண் நண்பர் வெளியே சென்ற பிறகு பல்லவி டே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பல்லவி டேயின் இறப்பு மேற்கு வங்க சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here