இந்தியாவின் எதிர்காலம் மாட்டு வண்டி தான் என தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் உலகளவில் மின்சார கார்கள் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது. அதேபோல், இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் மகிந்திரா நிறுவனமும் மும்முரமாக உள்ளது. இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் எலான் மஸ்க்கை மேற்கொள்காட்டி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மாட்டு வண்டியின் புகைப்படத்தை வெளியிட்டு, மாட்டு வண்டி தான் ஒரிஜினல் டெஸ்லா. எந்தவொரு கூகுள் மேப்பும் தேவையில்லை. எரிபொருள் தேவையில்லை. புகை மாசு இல்லை. முழுக்க முழுக்க தானாக இயங்கும் வாகனம். ஓய்வாக உறங்கி கொண்டே செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம். இவ்வாறு ஆனந்த் மகிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here