பணமோசடி செய்ததாக நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தயாரிப்பாளர் மகள் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ’மன்னர் வகையறா’ திரைப்படத்தின் ஆரம்ப தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசனின் மகள் ஹேமா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது; பணம் தொடர்பாக தனது தந்தையிடம் அளித்த வாக்குறுதிகளை நடிகர் விமல் கடைபிடிக்கவில்லை என்றும் அவர்மீது உரிய நடிக்கை எடுப்பதோடு, தங்களுக்கு சேர வேண்டிய ரூபாய்.1,73,78,000/- தொகையை பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here