சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

தொடர் சரிவு

அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. கடந்த 20-ம் தேதி ஒரு சவரன் ரூ.39,704க்கு விற்பனையான நிலையில், 21-ம் தேதி ரூ.39,568 ஆக குறைந்தது. 23-ம் தேதி ரூ.39,560 ஆகவும், 25-ம் தேதி மேலும் குறைந்து ரூ.39,296க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.39,096க்கு விற்பனையான தங்கம், நேற்று ரூ.38,896க்கு விற்கப்பட்டது.

அதிரடி குறைவு

இந்நிலையில், நகை பிரியர்களை மகிழ வைக்கும் வகையில் இன்று தங்கம் விலை கடுமையாக சரிந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,837க்கும், ஒரு சவரன் ரூ.38,696க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.80 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.68,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here