ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,957-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39,656-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.73,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here