ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள “வலிமை” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதுதால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

“வலிமை”

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. அஜித் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே டீசர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், மேக்கிங் வீடியோ மாஸாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

ரசிகர்கள் குஷி

இந்த நிலையில் ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வலிமை திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி (வியாழன்கிழமை) திரையரங்குகளில் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here