புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா. இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெண் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தனது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சந்திர பிரியங்கா, நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட சினிமா பாடலுக்கு மகிழ்ச்சியுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.













































