நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த தகவல் தவறானது என அவரது மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.

சினிமாவில் விஜயகாந்த்?

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடிக்க உள்ளதாகவும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

தவறான செய்தி

இதனை மறுத்துள்ள விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த செய்தி தவறானது எனக் கூறியுள்ளார். விஜயகாந்த் தற்போது கட்சிப்பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வில் இருப்பதாகவும் ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் கட்சியின் தலைமைக்குழு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here