இந்துக்களின் மனம் புண்படும் வகையில் வீடியோ வெளியிட்ட நடிகை சன்னி லியோன் மன்னிப்பு கேட்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

கனவுக்கன்னி

தனது அழகான நடிப்பால் கோடானக்கோடி இளைஞர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் நடிகை சன்னி லியோன். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு சென்ற சன்னி லியோன், மும்பையிலேயே செட்டில் ஆனார். படங்களில் நடிக்க வசதியாக தனது கணவர் டேனியல் வெபர் மற்றும் 3 குழந்தைகளுடன் மும்பையிலேயே இருக்கிறார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

1960-ம் ஆண்டு வெளியான கோஹினூர் திரைப்படத்தில் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு நடனமாடி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த தலைமை மத குரு சந்த் நாவல் கிரி மகராஜ், கிருஷ்ணர் – ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை சன்னி லியோன் ஆபாச நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளது இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளதாகவும், அந்த பாடலை அரசு உடனே தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். நடிகை சன்னி லியோன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், மீறினால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here