போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. அஜித் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால் படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது மாஸாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த, மேக்கிங் வீடியோவில் அஜித் நடித்த ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில் அஜித் பைக் ஸ்ட்ண்ட் காட்சி ஒன்றில் நிலை தடுமாறி கீழே விழுகின்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அப்போது “நாம் தடுமாறி விழலாம்… ஆனால் மீண்டும் எழுவோம்… நாம் போர்களத்தில் இருந்து பின்வாங்கக்கூடாது… அதுவே போதும்” என்ற மகாத்மா காந்தியின் வரிகள் அந்த இடத்தில் இடம்பெற்றிருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. “வலிமை” மேக்கிங் வீடியோவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here