தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

‘டாக்டர்’

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்ப்பர். தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் டாக்டர், அயலான், டான் ஆகிய படங்கள் உள்ளன. அதில் டாக்டர் படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் வினய், யோகிபாபு, அர்ச்சனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ‘டாக்டர்’ திரைப்படம் வருகிற 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அன்றைய தினமே தெலுங்கிலும் இப்படம் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் ரிலீசாகிறது.

டோலிவுட் என்ட்ரி

‘வருன் டாக்டர்’ படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், விரைவில் தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக தெலுங்கு கற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here