“சன் டிவியில்” ஒளிப்பரப்பாகும் ‘மாஸ்டர் செஃப் – தமிழ்’ நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மிகவும் பிரபலம்

1990-களில் பிரிட்டனில் ஒளிபரப்பாகி வெற்றியடைந்த சமையல் நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப்’. பின்னர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் அந்தந்த இடங்களுக்கு ஏற்றாற்போல, ‘மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ‘மாஸ்டர் செஃப் – ஆஸ்திரேலியா, மாஸ்டர் செஃப் – அமெரிக்கா’, ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே வெகு பிரபலம். வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சி, தற்போது “சன் டிவி” மூலம் தமிழில் ‘மாஸ்டர் செஃப் இந்தியா – தமிழ்’ என்ற பெயரில் அறிமுகம் ஆகிவுள்ளது.

தமிழில் முதல் முறை

சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் நடைபெறும் இந்த சமையல் நிகழ்ச்சியில் உலகின் முன்னணி செஃப்களான கெளஷிக், செஃப் ஆர்த்தி சம்பத், செஃப் ஹரிஷ் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். சிந்தனை, தோற்றம், சுவை ஆகிய மூன்றும் தங்களுக்கு முக்கியம் எனவும் தங்கள்முன் உணவு வைப்பதற்கு முன்பு போட்டியாளர்கள் ஆயிரம்முறை யோசிக்க வேண்டும் என்றும் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டனர் செஃப்கள். இதனால் போட்டியாளர்கள் மத்தியில் படபடப்பு ஏற்பட்டுள்ளது.

பெரும் வரவேற்பு

இந்தப் போட்டியில், போட்டியாளர்களது சமையல், அதன் சுவை தரம் போன்றவையே பிரதானம். புதிய உணவுகள், புதிய முயற்சிகள், நிகழ்ச்சியையும் சமையலையும் போட்டியாளர்கள் எந்த அளவிற்கு சீரியஸாக எடுக்கிறார்கள், ஒவ்வொரு சுற்றுக்கும் கடுமையாகும் விதிமுறைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் இறுதியில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். துணைப் பேராசிரியர், பேக்கர், யூடியூபர், மருத்துவர், பொறியாளர், கல்லூரி மாணவர், எழுத்தாளர் என ‘மாஸ்டர் செஃப் – தமிழ்’ நிகழ்ச்சியின் ஒவ்வொரு போட்டியாளரின் பின்னணியும் மிகவும் சுவாரஸ்யமானவை. கடந்த 7-ம் தேதி தனது ஒளிபரப்பை தொடங்கிய ‘மாஸ்டர் செஃப் – தமிழ்’ நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று எபிசோடுகளை கடந்து, இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here