நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ”காத்து வாக்குல ரெண்டு காதல்”. இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதில் சத்யா படத்தில் கமல்ஹாசனும் அமலாவும் இடம்பெறும் வளையோசை பாடலை போன்ற காட்சிகளில் மூன்று பேரும் நடிப்பது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here