கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா அண்மையில் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகள் சூர்யாவின் சூரரைப்போற்று படத்துக்கு கிடைத்தன. அதேபோல் சிறந்த நடிகைக்கான விருது ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை சமந்தாவுக்கு கிடைத்தது. சமந்தா சிறந்த நடிகைக்கான விருது வென்றதை ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். நடிகை நயன்தாரா, நடிகர் விஜய்சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சமந்தாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here