தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப். 6-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் எனவும் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என அனுமதித்துள்ள தமிழக அரசு, கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி என பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here