லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.

‘விக்ரம்’

மாநகரம், கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்குகிறார். கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

படப்பிடிப்பு தொடக்கம்

கடந்த ஆண்டே இப்படம் குறித்த அறிவிப்பு வெளியான போதிலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கி உள்ளது. கமல்ஹாசன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிக்கும் காட்சிகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். இதுதொடர்பாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here