ஆதி கைலாசாவில் ‘மல்டி லேயர் குவாரண்டைன்’ வசதி உள்ளதால் தனது பக்தர்களும், சன்னியாசிகளும், பிரம்மசாரிகளும் அவர்கள் குடும்பத்தினரை கைலாசாவுக்கு அழைத்து சென்று விடுங்கள் என சர்ச்சை சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

சர்ச்சை சாமியார்

கைலாசா எனும் நாட்டை உருவாக்கி அங்கு தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா. கைலாசா எங்கு இருக்கிறது என்பதே இன்னும் தெரியாமல் இருக்கும் நிலையில், அங்கிருந்து பேசுவது போன்ற வீடியோக்களை அடிக்கடி நித்யானந்தா வெளியிட்டு வருகிறார். கைலாசாவில் குடியேற விண்ணப்பம், ஹோட்டல் தொடங்கும் முயற்சி, ரிசர்வ் வங்கி, பல நாடுகளுடன் வர்த்தகம் என புதுப்புது தகவல்களை வெளியிட்டு, அங்கும் பிஸியாகவே இருக்கிறார் நித்தியானந்தா.

மோசமான வைரஸ்

அவ்வப்போது தனது சத்சங் வீடியோக்களை வெளியிட்டு வரும் நித்தியானந்தா சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோ ஒன்றில், தன்னுடைய கால் இந்தியாவில் பட்டால் தான் கொரோனா இந்தியாவை விட்டு போகும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் நித்தி பேசியதாவது; இந்தியாவில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதும், கூட்டமாக செல்வதையும் பார்க்கும்போது அவர்கள் கொரோனா 3-ம் அலையை வரவேற்பது போல உள்ளது. டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் மிகவும் மோசமானவை. இந்த வைரஸ்கள் கொரோனாவின் அப்டேட் வெர்சனாக வந்துள்ளது. 3-ம் அலை மோசமானதாக இருக்கும்.

கைலாசா தான் பெஸ்ட்

எனவே நான் எனது பக்தர்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இல்லையென்றால் ஆதி கைலாசாவுக்கு வந்து விடுங்கள். இங்கு தான் ‘மல்டி லேயர் குவாரண்டைன்’ வசதி உள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் சமூக கட்டமைப்பு சரியாக இல்லை. இங்கு மக்கள் கூட்டமாக செல்கிறார்கள். மற்றவர்களை தொட்டு பேசுகிறார்கள். தொற்று நோயை தடுப்பதில் இந்தியாவில் சமூக உள்கட்டமைப்பு தோற்று போய் உள்ளது. மக்கள் கூட்டம், கூட்டமாக செல்கிறார்கள். குடும்பத்தோடு ஷாப்பிங் செல்கிறார்கள். 3-வது அலையில் உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். பாதிப்பும் கடுமையாக இருக்கும். எனவே மல்டி லேயர் குவாரண்டைன் மட்டுமே உங்களை காக்கும். நான் எனது பக்தர்களுக்கும், சன்னியாசிகளுக்கும், பிரம்மசாரிகளுக்கும் சொல்கிறேன். உங்களின் குடும்பத்தினர் அல்லது நீங்கள் மிகவும் நேசிப்பவர்களை ஆதி கைலாசாவுக்கு அழைத்து சென்று விடுங்கள். இவ்வாறு நித்தியாந்தா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here