தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வந்த நடிகை கனிகா சின்னத்திரையில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னணி நடிகை

‘5 ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கனிகா. அதனைத்தொடர்ந்து சேரனின் ஆட்டோகிராப், அஜித் நடித்த வரலாறு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை கனிகா குறைத்துக் கொண்டார். 

வாய்ப்புகள் இல்லை

இந்நிலையில், நடிகை கனிகா விரைவில் தமிழ் சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேவையானி நடித்த கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் தான், தற்போது கனிகா நடிக்க உள்ள சீரியலை இயக்க உள்ளாராம். பட வாய்ப்பு இல்லாததால் நடிகை கனிகா சீரியலில் நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here