மலையாளப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கேரளா சென்றுள்ளார்.

முன்னணி நடிகை

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடனும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். பிரபுதேவா மீதிருந்த அளவு கடந்த அன்பினால் அவருடைய பெயரை தன்னுடைய கையில் பச்சையும் குத்தி கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது நாம் அனைவருமே அறிந்ததுதான். இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 5 வருடத்திற்கு மேலாக நயன்தாரா ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை கோலிவுட் வட்டாரம் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் உள்ளது.

தனி விமானம்

காதலர்களான நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தாங்கள் எடுத்துக்கொள்ளும் ரொமான்டிக் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். ஆனால், தற்போது அவர்கள் தனி விமானத்தில் பறப்பது போன்ற புகைப்படங்களையே பதிவேற்றி வருகின்றனர். ஏற்கனவே இருமுறை தனி விமானத்தில் பறந்த இந்த ஜோடி, தற்போது மீண்டும் தனி விமானத்தில் பறந்துள்ளது. மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் ‘பாட்டு’ படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக காதலன் விக்னேஷ் சிவனுடன் அவர் தனி விமானத்தில் கொச்சி சென்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here