பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்க இருக்கும் புதிய படத்தில் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி.

மனம் கவர்ந்தவர்

எதார்த்தமான பேச்சாலும், அழகான சிரிப்பாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. பல படங்களில் நடித்திருந்தாலும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தின் மூலம் மக்கள் அனைவரையும் தன் வசம் ஈர்த்தார். சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’, ‘மாமனிதன்’, ஆகிய படங்கள் சீனுராமசாமி – விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகின. இதில், ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் சில பிரச்சனைகள் காரணமாக வெளியாகவில்லை. ‘மாமனிதன்’ படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

மீண்டும் கூட்டணி

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, மீண்டும் இயக்குனர் சீனுராமசாமியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 5-வது முறையாக இவர்கள் இணையும் படத்தை, கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here