பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பின் போது ‘கோகோ கோலா’ பாட்டில்களை ஒதுக்கிவிட்டு தண்ணீரை குடிக்க அறிவுறுத்தியதால் அந்த நிறுவனத்தின் பங்குகள் வேகமாக குறைந்து ஒரு நாளில் மட்டும் ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்தது.

கோகோ கோலா

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று போர்ச்சுகல் மற்றும் ஹங்கேரி அணிகள் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரி அணியை வீழ்த்தி போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு போர்ச்சுகல் அணி கேப்டனும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ரொனால்டோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மேஜையின் மீது கோகோ கோலா பாட்டில்கள் இருந்ததை பார்த்து அவர் அதிருப்தியடைந்தார். உடனே அந்த பாட்டில்களை எடுத்துவிட்டு, தண்ணீர் பாட்டிலை எடுத்து காண்பித்து மக்கள் குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சமிக்ஞை செய்தார்.

 

பல ஆயிரம் கோடி இழப்பு

யூரோ 2020 போட்டிக்கான ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒன்றாகும். ரொனால்டோவின் இந்த செய்கையால் கோகோ கோலா நிறுவனத்திற்கு 4 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோகோ கோலா நிறுவனத்தின் பங்குகள் சரிந்து, இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 4 மில்லயன் டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ரொனால்டோ துரித உணவுகளுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்வது இது முதல்முறை கிடையாது. இதற்குமுன்பும் பலமுறை ஜங் உணவுகளுக்கு எதிராக பேசியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here