10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மார்க் இருக்காது என்றும் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும் எனவும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 11ம் வகுப்பு மாணவர் சேர்கை தொடங்கி உள்ளதாகவும், கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் கூறினார். தளர்வில்லாத 11 மாவட்டங்களில் தற்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை எனத் தெரிவித்தார்.

ஆல் பாஸ்

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் இருக்காது எனவும் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். ஒரு வாரத்திற்குள் புத்தகங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்துவது பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை என்றும் அவர் கூறினார். ஆன்லைன் கல்வி , கல்வி தொலைக்காட்சி வழியாகவே பாடம் நடத்துவது தொடர்ந்து நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here