பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த நிலையில், விவேக் மரணம் குறித்து நடிகர் கமல்ஹாசன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய கலை சமூகத்திற்கு பயன்பட வேண்டுமென நினைத்தவர் விவேக் எனக் குறிப்பிட்டுள்ளார். கலைஞர்கள் வாழ்க்கையை பொதுமக்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்கு பெரிய எடுத்துக்காட்டு விவேக் என கூறியுள்ளார். விவேக்கின் மரணம் செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்ததாகவும் கமல்ஹாசன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here