தமிழில் ‘அசுரன்’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சு வாரியர் தற்போது மாதவனுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

முன்னணி நடிகை

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும்பவர் மஞ்சு வாரியர். மிகவும் பிசியான நடிகையான இவர், தற்போது மோகன்லாலுடன் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’, மம்முட்டியுடன் ‘தி பிரீஸ்டு’, நிவின் பாலியுடன் ‘படவெட்டு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

மாதவனுக்கு ஜோடி

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அசுரன்’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர், ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்நிலையில், கல்போஷ் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் ‘அமெரிக்கி பண்டிட்’ எனும் பாலிவுட் படத்தில் நடிக்க மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு குஜராத் மாநிலம் போபாலில் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here