நடிகை திரிஷா நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ஒன்று நேரடியாக OTT-யில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் அறிமுகம்

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், மலையாளத்தில் ‘ஹே ஜூட்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நிவின் பாலியுடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம், கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

OTT ரிலீஸ்

‘ஹே ஜூட்’ திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இப்படம் பிப்ரவரி 5-ந் தேதி நேரடியாக OTT-யில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரிஷா நடித்துள்ள படம் நேரடியாக OTT-யில் வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here