சின்னத்திரை நடிகராக அறிமுகமான அஸ்வின் பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி சீசன் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன்மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார். அஸ்வினுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இதனிடையே, தனது இன்ஸ்டாகிராம் பக்க நேரலையில் பேசிய அஸ்வின், தனக்கு உதவ யாரும் முன்வராதபோது நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் நான் யார் என்று தெரியாமலே உதவினார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் இல்லாமல் நான் இல்லை எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here